மும்பை - 12 வயதுச் சிறுவன் ஒருவன், 12 மணி நேரத்தில் புனித நூலான திருகுர்ஆனை மனனமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளான்.
மராட்டியத்தில் உள்ள அகமத் நகர் என்ற இடத்தைச் சார்ந்த சிறுவன் முஹம்மத் ஜபியுல்லா. வயது 12. முஹம்மத் ஜபியுல்லா புனித நூலான திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளான். திருகுர்ஆன் ஏறத்தாழ 6000 வசனங்களைக் கொண்டதாகும்.
ஜபியுல்லா 07.07.2012 அன்று குர்ஆனை
மனனமாக ஒப்புவித்தான். காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு குர்ஆனை
முழுவதுமாக ஒப்புவித்து முடித்தான். இந்தச் சிறுவன் தாருல் உலூம் தாஜூல்
மஸ்ஜித் பள்ளியில் பயின்று வருகிறான்.
சிறுவன் ஜபியுல்லா கூறுகையில், குர்ஆனை மனப்பாடமாக்க 8 மாதங்கள் ஆனதாக தெரிவித்தான். சிறுவனின் இந்தச் சாதனையை பாராட்டி ஏராளமான மக்கள் அவனுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

2 comments:
அல்லாஹு அக்பர் இது போன்று மார்க்க பற்றுள்ள சிறுவர்கள் மேன்மேலும் போற்ற பட வேண்டும்.இந்த சிறுவனுக்கு கின்னஸ் சாதனை புக்கில் சிறுவனின் பெயர் இடம் பெற வேண்டும். இச் சிறுவனுக்கு என்னுடைய துவாவும் வாழ்த்துகளும்.
அல்லாஹு அக்பர் இது போன்று மார்க்க பற்றுள்ள சிறுவர்கள் மேன்மேலும் போற்ற பட வேண்டும்.இந்த சிறுவனுக்கு கின்னஸ் சாதனை புக்கில் சிறுவனின் பெயர் இடம் பெற வேண்டும். இச் சிறுவனுக்கு என்னுடைய துவாவும் வாழ்த்துகளும் அல்லாஹு அக்பர்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!