
தென்காசி : குற்றாலத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக வெயிலடித்து வருவதால் அருவிகளில் சிறிது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 90 நாட்கள் சீசன் காலம். இந்த ஆண்டு ஜூன் மாத சீசன் முழுவதும் ஏமாற்றிவிட்ட நிலையில் ஜூலை மாதத்தின் துவக்கத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாரல் நன்றாக பெய்தது. இந்நிலையில் திடீரென சீசன் மீண்டும் டல்லடிக்க துவங்கிவிட்டது.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சாரல் இல்லாததுடன் நல்ல வெயிலும் காணப்படுகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் சிறிது குறைந்து காணப்படுகிறது. மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் ஓரளவு நன்றாக கொட்டுகிறது. புலியருவியில் ஒரு பிரிவில் மட்டும் தண்ணீர் விழுகிறது.
பழையகுற்றால அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மெயினருவி மற்றும் ஐந்தருவியில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். பொதுவாக ஐந்தருவியில் மட்டும் நன்றாக தண்ணீர் கொட்டுவதால் நேற்று அந்த அருவியில் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!