ஆகஸ்ட் 15ல் ""சுதந்திர தின அணிவகுப்பு'' பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு


ஆக்ஸ்ட் 15-ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது இது குறித்து அதன் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும். அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்த தேசத்தை அன்னியர்கள் அடிமைப் படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் ""என்ன நடந்தால் நமக்கென்ன'' என்று இருந்திடாமல் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் ""சுதந்திர தின அணி வகுப்பையும்'' பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.

இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுர, நாகை, இளையான் குடி ஆகிய நகரங்களில் ""சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி'' நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!