லண்டன் ஒலிம்பிக்:மல்யுத்ததில் வெண்கலம் வென்றார் யோகேஷ்வர்!

Yogeshwar Dutt
லண்டன்:ஒலிம்பிக் ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மல்யுத்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறிய யோகேஷ்வர், அந்தச் சுற்றில் 3-1 என்ற கணக்கில் ரஷ்யாவின் கோவ் பெஸிக்கிடம் தோல்வி கண்டா
ர்.
எனினும், ரெபிசாஜ் முறையில் வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. (ரெபிசாஜ் வாய்ப்பு என்பது, காலிறுதி, முந்தைய சுற்றுகளில் ஒருவரை வீழ்த்திய வீரர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால்,  அவரிடம் தோற்ற வீரருக்கு வெண்கலத்துக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதாகும்.)
அவ்வாறு வழங்கப்பட்ட ரெபிசாஜ் வாய்ப்பில், தொடர்ச்சியாக மூன்று வீரர்களை அடுத்தடுத்து அட்டகாசமாக வீழ்த்திய யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இவர் ஹரியானாவைச் சேர்ந்தவராவார்.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 3-வது பதக்கம் இது. 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கஷபா தாதாசாஹேப் ஜாதவ் வெண்கலம் வென்றார். பின்னர் பீஜிங்கில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சுஷில் குமார் வெண்கலம் வென்றார். அதன்பிறகு இப்போது யோகேஷ்வர் வெண்கலம் வென்றுள்ளார்.
இந்தப் பதக்கத்துடன் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களில் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிஜீங் ஒலிம்பிக்கில் வென்ற 3 பதக்கங்கள்தான் இதுவரை அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது.
லண்டன் ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!