அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக் கிழமையன்று சால்மியா பூங்கா எதிரில் உள்ள மப்ரூக் கார்கோவின் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதக் கூட்டத்தின் போது அதிரை பைத்துல் மால் குவைத் கிளையின் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும். இந்த ஆண்டு கருத்தொற்றுமையின் அடிப்படையில் கீழ்க்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : ஜைனுல் ஹுசைன்.
துணைத் தலைவர் : கமருஜ்ஜமான்
செயலாளர் : முஹம்மது சாலிஹ்
துணைச் செயலாளர் : ஜமாலுத்தீன்
ஃபாஹீல் பகுதி பொறுப்பாளர்கள்: அப்துர் ரஹ்மான் ஆலிம், முஹம்மது ரஃபீக்
ஜஹ்ரா பகுதி பொறுப்பாளர் : ஹிதாயத்துல்லாஹ்
மக்கள் தொடர்பு : அப்துல் கரீம்
1. ABM குவைத் கிளையின் சார்பில் தொடங்கப்பட்டு, மற்ற கிளைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட "தொடர் வைப்புத் திட்டம்" (Recurring Deposit) அண்மைய நாள்களாகத் தொய்வடைந்திருந்தது. இதனை மீண்டும் புதிய உத்வேகத்துடன் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தனர்.
2. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடையே ஜகாத் மற்றும் ஃபித்ரா வசூலிக்கப்பட்டது.
3. குவைத்தில் பணிபுரியும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகளுடைய மருத்துவச் செலவுக்காக, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடையே வசூல் செய்து 77 குவைத் தினார்கள் அளிக்கப்பட்டது.
10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அதிரையைச் சேர்ந்த சகோதரர் ஒருவரை குவைத் சிறையில் இருந்து விடுதலை பெறச் செய்து பத்திரமாகத் தாயகம் அனுப்பி வைக்க உதவி செய்த K.Tic அமைப்பின் சகோதரர்கள் இருவர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
nantri ;




0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!