பிலால் நகர் – ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வட்டிக்கடனில் மூழ்கிருப்போர், அன்றாடம் தொழில்செய்து பிழைப்போர் என வாழ்ந்து வருகின்ற இப்பகுதிக்கு “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாகிகள் ரூ 5000/- ( ரூபாய் ஐந்து ஆயிரம் மட்டும் ) என்னிடம் ( சேக்கனா M. நிஜாம் ) வழங்கி அவற்றை நலிவுற்றோருக்கு வழங்கக் கேட்டுக்கொண்டனர்
.
இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பிலால் நகர் பகுதியைச் சார்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து தலா ரூபாய் 500/- வீதம் “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் சகோ. M.C. அலி அக்பர், செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது மற்றும் அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
1. சகோதரி ஜஹபர் – முதியோர்- விதவை
2. சகோதரி சுல்தான் நாச்சியா – கணவனால் கைவிடப்பட்ட பெண் ( மூன்று பெண் குழந்தைகள் உள்ளன )
3. சகோதரி கபீரா – ஏழைப்பெண்
4. சகோதரி நாஜிரா - கணவனால் கைவிடப்பட்ட பெண் ( மூன்று குழந்தைகள் உள்ளன )
5. சகோதரி ஜஹபர் நாச்சியா - முதியோர் – விதவை
6. சகோதரி பசீரா – முதியோர் – விதவை
7. சகோதரி ஹைரா – நலிவுற்ற முதியோர் – விதவை
8. சகோதரி கதீஜா – ஏழைப்பெண்
9. சகோதரர் ஹனீபா – ( ஐந்து பெண் குழந்தைகள் உள்ளன )
10. சகோதரி ஹவ்வா அம்மாள் - முதியோர் – விதவை
ஜகாத் நிதி உதவி செய்த பெயர் சொல்ல விரும்பாத “அந்த” சகோதரருக்கும், “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவருக்கும் என் நன்றியையும் வாழ்த்தையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இதுபோன்ற உதவிகளை மென்மேலும் “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பாக பிலால் நகரைப் போல மிகவும் பின்தங்கியுள்ள அதிரையின் பல பகுதிகளுக்கும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல் உதவி புரியட்டும் என்று “துஆ” செய்தவனாக........

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!