
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு “ இந்தியன் நேஷனல் ஆர்மி ” ( INA ).

நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் “பெரிய மின்னார் “ மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப் மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இவ்வமைப்பில் பணி புரிந்து நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நமதூரைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளனர். அன்னார்கள் அனைவரும் இந்திய வரலாற்றில் பதியப்பட வேண்டும் ( இன்ஷா அல்லாஹ் ! )
இந்தியா சுந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்து 66 ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் இந்நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை பெருமையுடன் நினைவு கூர்வோம்.
மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.
nantri;சேக்கனா M. நிஜாம்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!