கண்கள் குளமாகுதம்மா.....



இறைவனின் பல அருட்கொடைகள் சூழப்பட்டு அன்றாடம் அதை குறை சொல்லி குற்றம் சுமத்தி திருப்தி இல்லாமல் வாழ்ந்து வரும் நாம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சியின் நேரலை மார்க்க கேள்வி, பதில் நிகழ்ச்சியில் அங்குள்ள மார்க்க அறிஞரை (உலமா) நோக்கி சோமாலியாவிலிருந்து தொலைபேசியில் அழைத்த ஒரு இஸ்லாமிய சகோதரர் கேட்ட கேள்வி இதோ:

கேள்வி : நாங்கள் சஹரிலும் உணவு உண்பதில்லை; நோன்பு திறப்பதற்கும் உணவு ஏதும் உட்கொள்வதில்லை. எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதே. 

(அவர்கள் உணவு உண்ணாமல் இருப்பது உணவை வைத்துக்கொண்டல்ல. உணவில்லாமல் கடும் பஞ்சமும், வறட்சியும் அங்கு நிலவிவருவதை நாம் ஊடகங்கள் மூலம் அறிந்து வருகிறோம்)

பதில்   : ஊற்றெடுக்கும் கண்ணீரைத்தவிர பதில் வேறென்னவாக இருக்க முடியும்?

சோத்துலெ உப்பு இல்லாட்டியோ அல்லது புளியாணம் கொஞ்சம் கடுத்து போய்ட்டாலோ அல்லது தயிரு புளிச்சிபோயிட்டாலோ முன்னறிப்பு இல்லாத பெரும் போராட்டமே சில இடங்களில்/வீடுகளில் நடந்து விடும்.

இறைவா! நன்றி கெட்ட எங்களை உன் கடும்கோபத்தால் தண்டித்து விடாதே!!! கருணை காட்டி உனக்கு உண்மையில் எக்காலத்திலும் நன்றியுள்ள அடியானாக எங்களை எல்லாம் ஆக்கியருள்வாயாக!!! ஆமீன்... 


தகவல் பரிமாற்றம் : மு.செ.மு. நெய்னா முஹம்மது

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!