11 Aug 2012

யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குறித்து சர்வதேச சமூகம் கவலையடைந்திருக்கும் வேளையில் மேற்கு மியான்மரின் ராக்கேன் மாநிலத்தில் மீண்டும் பெரும்பான்மை புத்த பயங்கரவாதிகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராக்கேனில் நேற்று புத்தர்கள் ஒரு மஸ்ஜிதுக்கு தீவைத்துக் கொளுத்தியதுடன் முஸ்லிம் கிராமங்களையும், வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது. கலவரத்தை தொடர்ந்து ராக்கேனில் அரசு ராணுவத்தை அனுப்பிய பொழுதும், அரசு ஆதரவுடன் புத்தர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றார்கள்.
இதனிடையே இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மியான்மர் அரசு, இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை(ஒ.ஐ.சி) அழைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. முஸ்லிம்களுடனான மியான்மர் அரசின் அணுகுமுறை சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதை தொடர்ந்து சவூதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியை மியான்மர் அரசு அழைத்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!