அஸ்ஸலாமு அலைக்கும்.....
இவ்வருடம் (2012) ரமலானில் துபாய் மற்றும் ஏனைய அமீரகங்களிலுள்ள அதிரைவாசிகளிடமிருந்து பித்ரா, ஜகாத் மற்றும் ஸதாக தர்மங்களை திரட்டி அல்லாஹ்வின் பெருங்கிருபையால் மொத்தம் ரூ.114,975 அளவுக்கு அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அமீரகத்தில் சுமார் 3000 க்கும் அதிகமான அதிரைவாசிகள் இருந்தபோதும் 200க்கும் குறைவானவர்களே தங்களது கடமையான தர்மங்களை பைத்துல்மால் துபாய் கிளை மூலம் வழங்கினர்.ஒருசிலர் நேரடியாகவும் வழங்கியதாகச் சொன்னார்கள். மொத்த தொகையில் பெரும்பாலோர் தங்களது ஃபித்ரா தொகையையே அதிகம் வழங்கினர். இதன் மூலம் இவ்வருட ரமலானில் அதிரை பைத்துல்மால் சார்பில் 120 மூட்டைகள் தரமான அரிசியை அதிரைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது.
துபாயில் பைத்துல்மால் கிளை 2004 முதல் செயல்பட்டு வந்தாலும் கடந்த எட்டாண்டுகளில் துபாயிலிருந்து வசூல் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட தொகைகளில், இவ்வருடம் சுமார் 80%க்கும் அதிகமான பங்களிப்பு சம்சுல் இஸ்லாம் முஹல்லாவாசிகளிடம் இருந்து வசூலானது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.
ஜகாத் தொகை குறைவாக இருந்தபோதிலும் மார்க்க அடிப்படையில் ஆண்டு முழுவதும் பயன்படும் வகையிலான சில நலத்திட்டங்களுக்குப் ஜகாத் தொகையே பயன்படுத்தப்படுவதால்,இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் அதிரைவாசிகள் தங்கள் ஜகாத் தொகையைக் கணக்கிட்டு ஒரு பகுதியை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கினால் அதிகமான ஏழைகளின் நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும்
மேலும், ஏனைய நலத்திட்டங்களுக்கு ஸதகா மற்றும் உறுப்பினர் நன்கொடை மூலமே உதவ முடிகிறது என்பதால் அதிரைவாசிகள் பைத்துல்மாலின் புரவலர் மற்றும் ஆயுட்கால சந்தா ரூ.1000 செலுத்தி தங்கள் பங்களிப்பை உறுதி செய்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நல்லமல்களை அங்கீகரித்து ஈருல பாக்கியங்களையும் வழங்குவானாக!!!
குறிப்பு: அட்டவனை மற்றும் வரைபடங்கள் அதிரையர்களின் பங்களிப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் துபாய் கிளை
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்.....
nantri-adirai xpress



0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!