26 Aug 2012

புதுடெல்லி:ஈரானுடன் உறவுகளைக் குறைத்துக் கொண்டு, அந்நாட்டின் மீதான தடைகளை அமல்படுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா நிர்பந்தம் அளித்து வரும் சூழலில், அந்நாட்டில் நடைபெற விருக்கும் 120 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அணிசேரா இயக்கத்தின் 16-வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக ரஞ்சன் மத்தாய் டெல்லியில் நேற்று(சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியது:
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணிசோரா இயக்கத்தின் 16வது உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 28-ம் தேதி புறப்பட உள்ளார். மாநாட்டுக்கு வரும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திப்பார். தவிர, ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ மற்றும் அதிபர் அஹ்மத் நஜாத் ஆகியோருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் பேச்சு நடத்துவார்.
அமைதி மற்றும் பாதுகாப்பே நமக்கு முக்கியமான விஷயங்களாகும். ஒட்டுமொத்த மேற்காசியப் பகுதியும், குறிப்பாக பாரசீக வளைகுடாவும் இந்தியாவின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் முக்கியமானவை. அவற்றில் எண்ணெய் இறக்குமதி மற்றும் நமது ஏற்றுமதி ஆகியவையும் அடங்கும்.
ஈரானுடனான உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அந்நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பின்போது, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க பிரதமர் முயற்சி மேற்கொள்வார்.
அணிசேரா இயக்க நாடுகளின் உச்சிமாநாட்டை முன்னிட்டு, இந்தியா-ஈரான் -ஆஃப்கானிஸ்தான் ஆகியவை இடையே டெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார நிலைமை மற்றும் சபஹார் துறைமுகத்தை நன்கு பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!