26 Aug 2012

டவுன்ஸ்வில்லே: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை, இந்தியா வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் ஜூனியர் உலகக் கோப்பை நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் பாஸிஸ்டோ 87 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் சந்திப் சர்மா 4 விக்கெட்களையும், பாபா அப்ரஜித், ரவிகாந்த் சிங் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
கோப்பையை வெல்ல 226 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 47.4 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் உன்முகுத் சந்த் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இக்கட்டான நிலையில் களமிறங்கிய சமித் பட்டேல் தன் பங்குக்கு 62 ரன்கள் சேர்த்து இறுதி வரை களத்தில் நின்று வெற்றிக்கு துணைபுரிந்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி, ஜூனியர் உலகக் கோப்பை கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றும் மூன்றாவது ஜூனியர் உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கேப்டன் உன்முகுத் சந்த் இந்த தொடரில் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் நாயகன் விருதுக்கு தேர்வுக்கு தமிழக வீரர் பாபா அப்ரஜித், ஆஸ்திரேலிய கேப்டன் பாஸிஸ்டோ ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். இறுதியில் தொடர் நாயகன் விருதை பாஸிஸ்டோ தட்டிச் சென்றார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!