இப்படித்தான் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!



திங்கள்கிழமை, ஜூலை 9, 2012, 15:29 [IST]

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் நாசா அனுப்பியுள்ள Mars Exploration Rover Opportunity என்ற விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் மீது பொருத்தப்பட்ட பான்கேம் எனப்படும் பானரோமிக் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 817 புகைப்படங்களை இந்த கேமரா எடுத்துத் தள்ளியுள்ளது.
 what does mars look like new nasa photos

செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது.
நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.
ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. 2வது படத்தில் செவ்வாய் கிரகத்தின் கிரேட்டர் அழகாக காணப்படுகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.
கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!