ஆப்கான் வரலாற்றில் முதல் ஒலிம்பிக் பதக்கம்!

Afghanistan's Rohullah Nikpah poses with his bronze medal
லண்டன்:இதுவரை பங்கேற்ற எந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் எவ்வித பதக்கமும் பெறாத ஆப்கானிஸ்தான் முதன் முறையாக லண்டன் ஒலிம்பிக்ஸில் பதக்கத்தை வென்றுள்ளது.
டேக்வாண்டோ(taekwondo) என்ற தற்காப்பு கலை போட்டியில் 58 கிலோ கிராம் பிரிவில் ஆப்கானைச் சார்ந்த ரூஹுல்லாஹ் நிக்பாயி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

1936-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தான் ஆப்கானிஸ்தான் முதன்முதலாக பங்கேற்றது. அதன் பிறகு 12 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற பிறகு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
“தங்க பதக்கம் கிடைப்பதை விட மகிழ்ச்சி எனக்கு இந்த பதக்கத்தை பெறும்பொழுது ஏற்பட்டது. தங்க பதக்கத்தை எதிர்பார்த்தேன். ஆனால், வெண்கலம் கிடைத்துள்ளது. ஆனால், நாட்டிற்கு இதன் மதிப்பை குறித்து சிந்திக்கும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.” என்று ரூஹுல்லாஹ் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ரூஹுல்லாஹ்வின் பிறந்த மண்ணாகும். ஆனால், போர்களும், மோதல்களும் காரணமாக ரூஹுல்லாஹ்வின் குடும்பம் ஈரானில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கலம் தேடும் நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த அகதிகள் முகாமில் வைத்துதான் ரூஹுல்லாஹ் தனது 10-வது வயதில் டேக்வாண்டோ என்ற தற்காப்பு கலையில் பயிற்சிபெற துவங்கினார். பின்னர் 2004-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் 25 வயது இளைஞரான ரூஹுல்லாஹ்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!