
அதிரை கீழத்தெருவில் உள்ள ஜாவியாவில் தொன்றுதொட்டு
நடைபெற்று வரும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷாஅல்லாஹ் நாளை 16-10-2012 செவ்வாய்கிழமை ஆரம்பம் செய்யப்படுகிறது. தினசரி காலை 6.00 மணிக்கு தொடங்கி மார்க்க அறிஞர்களின் பயானுடன்
நிறைவுபெறும். அதிரை முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மஜ்லிஸை
சிறப்படைய செய்வதுடன் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் பரக்கத்தையும் பெற்று பயன் அடைவோமாக.
3 comments:
இந்த புஹாரி ஷரீஃப் போவதற்கு அப்போதல்லாம் ஒரு அளவு வேண்டும் அந்த அளவு இல்லாவிட்டால் உள்ளவிடமாட்டர்கள் இப்போது அப்படி ஒன்றும் அளவு இல்லை ஏன் என்றால் அப்போது பெரியவர்கள் சிரியவர்கள் அதிகமாக வருவார்கள் இப்போது அப்படி இல்லை.இளைங்கர்கள் அதிகமாக வருவது இல்லை ஆதலால் யாருக்கும் அளவுகிடையாது.அனைவரும் சென்று பயான் கேட்டு பயன் பெறவும்.
அதிரை அமீரக கீழத்தெரு தலைவர் ஜலில்காக்கா வீட்டு மாடியில் பெண்கள் பயான் கேட்பதற்கு தனி இடவசதி உள்ளது பெண்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும்.பயான் முடித்ததும் நார்ச வழக்கப்படும்.
எங்களது சிறுவயதுப்பருவத்தில் புகாரி ஷரிப்(ஜாவியால்) ஆரம்பம் ஆகிவிட்டால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.,அந்த 40 நாளும் எங்களுக்கு பெருநாள் தான்.அந்த பொற்காலத்தை என்றும் மறக்கமுடியாது.என்றென்றும் மனதில் நிற்பவை உள்ளே செல்ல அளவுபார்த்து அனுமதிப்பது,மொம்குட்டி ஆலிமசாவின் பயான் & துவா.பாசிப்படத்தான் கபீர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அவர்களின் கண்டிப்பு(சிறுவர்களின் சத்தத்தை அடக்குவது)லெவசா லெப்பை அப்பாவின் நிர்வாகம்,சிங்கம் ஆலிமசாவின் திக்க்ர் இன்னும் பல ஜாவியாளின் சிறப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம். புகாரி சரீப் இருப்பது நமது ஊருக்கு ரொம்ப பெருமையான விஷயம்.அதிலும் நமது தெருவில் அமைந்து இருப்பது நமக்கு இதுவும் ஒரு பெருமை படக்கூடிய விஷயம்.எப்பொழுதும் போல் சிறப்பாக நடக்க அல்லாஹ் விடத்தில் நாம் அனைவரும் துவா செய்வோமாக...அமீன்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!