கொல்கத்தா: 400 ஹஜ் யாத்ரீகர்களுடன் ஜெத்தாவில் இருந்து இந்தியா வந்த
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக
கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹஜ் யாத்ரீகர்கள் 400
பேருடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சவுதி அரேபியாவின்
ஜெத்தாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் திடீர்
என்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நேற்று இரவு 10.45 மணிக்கு
கொல்கத்தாவில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக
தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தீப் பிடித்தால் எச்சரிக்கும் அலாரம்
திடீர் என்று வேலை செய்யாததால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக இருந்தனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
மேலும் மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லாவை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் நேற்று கொல்கத்தாவில் இருந்து தலைநகர் அய்ஸ்வால் சென்றது. ஆனால் அய்ஸ்வாலில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் நேற்று மதியம் 2.20 மணிக்கு மீண்டும் கொல்கத்தாவுக்கே திரும்பியது.

1 comments:
அல்லாஹு லேசாக்கி வைத்தான் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!