பிலால் நகர் தர்பியா மையம்...

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்...



பிலால் நகர் தர்பியா மையம், எதிர்பார்ப்பில் மக்கள்

பொதுவாக பிலால் நகர் மக்கள் குறித்தும், அவர்களின் மார்க்க நிலை குறித்தும், வட்டியால் சுரண்டப்படும் அவர்களின் வாழ்க்கை தரம் குறித்தும் அறியாதோர் யாரும் இருக்க முடியாது.

கல்வி, மார்க்கம், பொருளாதாரம், சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ள இவர்களின் அறியாமையை பயன்படுத்தி மேலும் பல தவறான வழிகளில் ஈடுபடுத்துவோர் சிலரும் அவர்களில் ஊடுருவியுள்ளனர் என்பது கசப்பான உண்மை.

பிலால் நகர் மக்களின் அறியாமை இருளை அகற்றிட, அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த மார்க்கக் கல்வியை புகட்டிட, பெண்களுக்கு இஸ்லாத்தினை அதன் தூய வடிவில் எத்தி வைத்திட, ஒரு மிகப்பெரும் முயற்சியில் அதிரை தாருத் தவ்ஹீத் என்றதோர் அமைப்பு அவர்கள் பகுதியிலேயே தர்பியா மையம் ஒன்றை நிறுவிடும் பணியில் ஈடுபட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

பல்வேறு பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொண்டு கட்டப்பட்டு வரும் தர்பியா மைய பணிகள் முழுமைபெற உட்தளம், சுற்றுவேலி, தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு என சில பணிகளே எஞ்சியுள்ளன. மேலும் இதற்கென ஒரு ஆலிமா ஒருவரும் முறையான பயிற்சிகளுடன் தயார் நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தர்பியா மையம் குறித்து இப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசியபோது, இதன் திறப்பை மிகவும் எதிர்பார்ப்பதாகவும், இந்த பகுதிக்கு இப்படிப்பட்ட தர்பியா மையம் மிகவும் அவசியம் எனவும், தர்பியா மையம் திறக்கப்படும் போது தங்களுடைய ஆதரவை கண்டிப்பாக வழங்குவோம் எனவும் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

எந்த இயக்கத்தையும் சாராத, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில், அதிரை தாருத் தவ்ஹீத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படவுள்ள இத்தர்பியா மையம் விரைந்து துவங்கிட உங்கள் பங்கையும், ஆதரவையும் வழங்கி, சதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையை பெற்றிட அழைக்கின்றோம்;.



தொடர்புக்கு:
அதிரை அஹமது             0091 9894989230      
துபையில்:    அப்துல் காதர்                00971 55 2829759     
 
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ் 


4 comments:

அப்துல் ஜலீல்.M said...

மாஷா அல்லாஹ், தர்பியா மதர்ஸா நடைபெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும்.

அப்துல் ஜலீல்.M said...
This comment has been removed by the author.
அதிரை.மெய்சா said...

மாஷா அல்லாஹ், வாழ்த்துகள்

Adiraieast said...

மாஷா அல்லாஹ். வரவேற்க்கதக்க ஓன்று..
சமூக அக்கறையோடு செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் வெற்றியடைய வாழ்த்துக்களும், துஆவும்,எங்களால் முடிந்த உதவியும் இன்ஷா அல்லாஹ் நல் உள்ளங்களை வந்தடையும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!