துபாயில் குடும்ப விசா பெறுவதற்கு குறைந்தபட்ச சம்பளத்தில் மாற்றமில்லை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

துபாயில் குடும்ப விசா பெறுவதற்கு குறைந்தபட்ச சம்பளத்தில் மாற்றமில்லை என்றும் விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழக்கம் போல நடைபெறுகிறது என்றும் துபாயின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகார இயக்குனர் ஜெனரல் முகம்மது அஹமது அல் மாரி தெரிவித்துள்ளார்.


குடும்ப விசா பெற குறைந்த பட்ச சம்பளமாக 4,000 திர்ஹமும் கம்பெனி தங்கும் வசதி அளித்திருந்தால் 3,000 திர்ஹமும் தேவை என்ற நிலையே தற்பொழுதும் நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்ற வெள்ளிக்கிழமை அன்று துபாயில் உள்ள கலீஜ் டைம்ஸ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் துபாயில் குடும்ப விசா பெறுவதற்கு குறைந்தபட்ச மாத சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்த செய்திகள் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் , டைப்பிங் சென்டர்கள் மற்றும் துபையில் வாழும் வெளிநாட்டவர்கள் ஆகியோரிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் வெளியிட்டதாக கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது


செய்தி தகவல் : கலீஜ் டைம்ஸ்

தற்போதைய செய்தி : Khaleej Times earlier news

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!