ஜெத்தா : சர்ச்சைக்குள்ளான நிதாகத் சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த தொடங்கியிருக்கும் சவூதி அரசின் செயலால் ஜுலை 3 க்கு முன் சவூதியை விட்டு வெளியேற முடியா இந்தியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
சவூதி அரேபியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் வேலை வாய்ப்பின்மையை கட்டுப்படுத்த சவூதியில் உள்ள நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவிகித வேலை வாய்ப்புகளை சவூதி நாட்டவர்களுக்கு கொடுக்க வகை செய்யும் வகையில் நிதாகத் எனப்படும் சட்டத்தை சவூதி அரசு கொண்டுவந்துள்ளது. அச்சட்டம் சமீப காலமாக தீவிரமாக அமுல்படுத்தப்படுவதால் தற்போது பல இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர்.
தற்போது வேலை இழந்த இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களாக கருதப்படுவர் என்பதால் சவூதி அரசு விதித்துள்ள ஜூலை 3 கெடுவுக்குள் சவூதியை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும்.
சவூதி அரேபியாவை விட்டு வெளியேற விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களில் இது வரை 57,000 விண்ணப்பங்கள் இந்திய தூதரகத்தால் பரீசிலிக்க்கப்பட்டு இருந்தாலும் சவூதி அரசு அதிகாரிகள் ஒரு நாளுக்கு 500 விண்ணப்பங்களை மட்டுமே பரீசிலித்து வருகின்றனர்.
ஒரு நாளுக்கு 500 விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து வந்தால் ஜுலை 3 கெடுவுக்குள் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க முடியாது என்பதால் எஞ்சியவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் எனும் அடிப்படையில் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து சவூதி அரசுடன் பேச்சுவார்தை நடத்த சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் "குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரையும் வெளியேற்றுவது கடினம். என்றாலும் முடிந்த வரை முயற்சிப்போம்" என்றார்.
சவூதி அரேபியாவில் உள்ள 80 இலட்சம் வெளிநாட்டவர்களில் 24 இலட்சம் நபர்கள் இந்தியாவை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை விண்ணப்பித்துள்ள 57,000 நபர்களில்.
உத்தரபிரதேசத்தை சார்ந்த 21,000 நபர்களும்.
ஆந்திராவை சார்ந்த 8695 நபர்களும்.
மேற்கு வங்காளத்தை சார்ந்த 7913 நபர்களும்.
மஹாராஷ்டிராவை சார்ந்த 7000 நபர்களும்.
தமிழகத்தை சார்ந்த 5782 நபர்களும்.
கேரளாவை சார்ந்த 6610 நபர்களும். விண்ணப்பித்துள்ளவர்களில் அடங்குவர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!