மீன்களின் இன பெருக்கத்துக்காக தமிழகத்தில் உள்ள கிழக்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமரி வரை அமலில் இருக்கும். இந்த ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி தடை அமல்படுத்தப்பட்டது.
இந்த கால கட்டத்தில் கடலில் விசை படகுகள் மூலம் மீன் பிடிக்க முடியாது. ஆனால் பைபர் படகு, நாட்டு படகு மீனவர்கள் கடலில் இருந்து சிறிது தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 45 நாள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிகிறது.
இதற்காக மீனவர்கள் தயாராகி வருகின்றனர். கடைசி நேர நெரிசலை தவிர்க்க, மானிய விலை டீசலை பெற இன்று காலை முதலே பங்க்குகளில் மீனவர்கள் திரண்டனர். மேலும் அவர்கள் மராமத்து செய்த படகுகள் சரியாக உள்ளதா என இறுதி கட்டமாக சரி பார்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஐஸ் உற்பத்தி தொழிலும் களை கட்டியுள்ளது. மீனவர்கள் அனைவரும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் கடலுக்கு புறப்படுகின்றனர். கடந்த 45 நாட்களில் மீன்கள் உற்பத்தி அதிகரித்து இருக்கும் என்பதால், அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்ற உற்சாகத்தில் மீனவர்கள் உள்ளனர்.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகு, வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை மராமத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். மீன்கள் வரத்து பெருமளவு குறைந்ததால், அவற்றின் விலையும் கிடுகிடுவென அதிகரித்தது.
நன்றி:இந்நேரம்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!