ஜித்தா: இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள புதுவகை கடவுச்சீட்டை சவூதி குடியுரிமை அலுவலகம் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்திய கடவுச்சீட்டு வகையானது, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தூதரகங்களிலும் வழங்கப் பட்டு வருகிறது. இப்புதிய கடவுச்சீட்டு டிசைனில், பழைய மாதிரியில் உள் அட்டையில் இருக்கும் கடவுச்சீட்டுக்குரியவரின் புகைப்படம் இனி மேல் மூன்றாம் பக்கம் இடம் பெறும்.
இந்த நிலையில் இந்தப் புதிய வகை கடவுச் சீட்டினை ஜித்தா வெளியுறவுத்துறை குடியுரிமை அலுவலகம் ஏற்க மறுக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இந்தியா தரப்பிலிருந்து சவூதி வெளியுறவுத்துறை குடியுரிமை அலுவலகங்களுக்கு தரப்படவில்லை என்று கூறப் படுகிறது.
ஆனால் இதுகுறித்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப் பட்டுவிட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சுமார் 200 புதுவகை இந்திய கடவுச் சீட்டுகளை நேற்று முன்தினம் சவூதி குடியுரிமை அலுவலகம் நிராகரித்துவிட்டதாக சவூதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இக்காமா உள்ளிட்ட குடியுரிமை அட்டைகள் புதுப்பிக்கச் செல்லும் இந்தியர்கள் இதுபோன்ற புதிய சிக்கலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத் தக்கது.
.நன்றி: இந்நேரம்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!