அதிரை அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !


அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் இன்று [ 07-06-2013 ] மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு இரயில நிலையம் அருகே அமைந்துள்ள கல்லூரியின் வளாகத்தில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.



 
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பேராசிரியை சயீதா பானு அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும் பட்டம் பெற்ற ஆலிமாக்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.

விழா நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.

மேலும் சிறந்த மாணவிகளுக்கும் பெற்றோர்கள் சந்திப்பில் தவறாது கலந்துகொண்டோருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள் பெரும்திரளாக இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
 
 

நன்றி அதிரை நியூஸ்

2 comments:

அதிரை.மெய்சா said...

அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து ஆலிமாக்களுக்கும் என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.

ஹபீப் HB said...

பட்டம் பெரும் அனனைத்து மாணவிகளுக்கும் என்னுடைய துவாவும் வாழ்த்துகளும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!