தஞ்சை, பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்ட புகைப்படம் எடுக்கும் பணி

:

தஞ்சை வட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.தஞ்சை கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தஞ்சை வட்டத்தை சேர்ந்த வல்லம், கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை மற்றும் ராமாபுரம் ஆகிய சரகங்களில் இன்று (4ம் தேதி) முதல் வரும் 10ம் தேதி வரை யும், பட்டுக்கோட்டை வட்டத்தில்  துவரங்குறிச்சி, ஆண்டிக்காடு, குறிச்சி, தம்பிக்கோட்டை, நம்பிவயல், அதிராம்பட்டிணம், பெரியக்கோட்டை, மதுக்கூர், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை ஆகிய சரகங்களில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரையும் மருத் துவ காப்பீட்டு அட்டை

கிடைக்க பெறாதவர்களுக்கு புகைப்படம் எடுக்கும்பணி அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. மேற்கண்ட வட்டங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து புகைப்படம் எடுத்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புகைப்படம் எடுக்க வரும் பயனாளிகள் குடும்ப அட்டை நகல் மற்றும் ரூ.72 ஆயிரத்துக்குள் வருமானம் உள்ள பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சுப்பையன் கேட்டுக்கொண்டுள்ளார்

நன்றி: அதிரை பிறை 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!