அமீரகம், ராஸ் அல் கைமாவில் ஒரு ஓட்டுனருக்கு 1 மில்லியன் திர்ஹம் அபராதம் விதிப்பு
அமீரகத்தில் ஒவ்வொரு போக்குவரத்து மீறல்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இவற்றில் விதிவிலக்காக மிக மிக மோசமான ஓட்டுனர்கள் அல்லது போக்குவரத்துக் குற்றங்களுக்கு அதீத தண்டனையை வழங்கும் அதிகாரமும் போலீஸாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமீரக வரலாற்றில் அதிகபட்சம் 2.5 லட்சம் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது தற்போது 1 மில்லியன் (10 லட்சம்) விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் புதிய சாதனையாக உருவெடுத்துள்ளது.
மிக மிக வேகமாக வாகனங்களை இயக்குதல், முரட்டுத்தனமாக பிற வாகனங்களை முந்திச் செல்லுதல், பிறரை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குதல், ரேடார் கேமிராக்களில் சிக்குதல் போன்ற பலவகையான போக்குவரத்துக் குற்றங்களை செய்த ஒருவர் மீது ராஸ் அல் கைமா போலீஸார் இந்த எதிர் சாதனை அபராதத்தை விதித்துள்ளனர்.
எனினும், ராஸ் அல் கைமாவில் உள்ள சலுகைகளின்படி இந்த ஓட்டுனருக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது 5 லட்சம் திர்ஹம் செலுத்தினால் போதுமாம்...
Source: Gulf News

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!