குளியலுக்காக செடியன் குளத்திற்கு சிறுவர்கள் வருகை அதிகரிப்பு!!!


தொடர் விடுமுறை தினங்களையொட்டி, கடல்போல் காட்சியளிக்கும் அதிராம்பட்டினம் செடியன் குளத்தில் குளியலுக்காக பள்ளிச்சிறுவர்களின் வருகை அதிகரித்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இக்குளத்தில் தற்போது போதுமான அளவில் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிப்பதால், குளிப்பதற்கு பள்ளிச்சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை சுண்டி இழுத்து வருகிறது.

தினமும் இக்குளத்தில், பொதுமக்கள் குளித்து மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தொடர் விடுமுறையில் பொழுதை கழித்து வரும் பள்ளிச்சிறுவர்கள்  உற்சாகமாகக் குளித்து வருவது அப்பகுதி வழியே கடந்து செல்வோரை பெரிதும் கவர்ந்து வருகிறது. குளத்தில் டைவ் அடித்தும், நீந்திச் சென்றும், முக்குளித்தும், நேரம் போவது தெரியாமல் கண் சிவக்கும் அளவிற்கு மணிக்கணக்கில் குளித்து மகிழ்கின்றனர்.

குளித்து முடித்துவிட்டு குளத்தின் கரையில் அமைந்துள்ள நூற்றாண்டைக் கடந்து பசுமையாகவும், அதிரையின் அடையாளமாகத் திகழும், மருத்துவ குணமுடைய மருத மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்துச் செல்கின்றனர்.

எச்சரிக்கை:

குளத்தில் போதுமான அளவில் நீர் நிரம்பிக் காணப்படுவதால், சிறுவர்கள் தனியாகக் குளிக்க வேண்டாம். தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து குளிக்கவும். ஆழப்பகுதிக்கு நீச்சலடித்துச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!