துபையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற காரை தள்ளிய போலீஸ்காரருக்கு பதவி உயர்வு





சமூக ஊடகங்களின் வாயிலாக தினந்தோறும் அராஜக, அடாவடி, லஞ்சப் பேர்வழிகளை எல்லாம் போலீஸ் உடையில் கண்டு வருகின்றோம். இத்தகையர்களிடம் மனிதாபிமான உதவிகளை கனவில் கூட எதிர்பார்ப்பதே தவறு ஆனால் துபையில் தனது உயிரை பணயம் வைத்து உதவிய போலீஸ் ஒருவரின் செயல் பாராட்டுக்களை பல வடிவிலும் குவித்து வருகிறது.

துபை போக்குவரத்து போலீஸ் வலீத் மலுல்லாஹ் அப்துல்லாஹ் என்பவர் பரபரப்பு மிகுந்த சாலையின் நடுவே திடீரென பழுதடைந்து நின்றுவிட்ட காரை தனியாளாக களமிறங்கி தள்ளிவிட்டு சாலையோரம் கொண்டு செல்ல உதவிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாக, துபை போலீஸ் துறைத்தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லாஹ் கலீஃபா அல் மர்ரி அவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை அழைத்து பாராட்டியதுடன் உடனடியாக அவருக்கு பதவி உயர்வையும் வழங்கி கவுரப்படுத்தினார்.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!