துபையில் நோல் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு இலவச கூப்பன் திட்டம் !


துபையில் பஸ் மற்றும் மெட்ரோ டிக்கெட்டுகளாக நோல் கார்டுகள் (NOL Cards) அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு அதன் பயன் படகு சவாரி, பூங்காக்கள், எதிஹாத் மியூசியத்திற்கான அனுமதி, பார்க்கிங் கட்டணம் மற்றும் சில்லறை கடைகளில் பொருட்கள் வாங்குவது என விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.


இந்த நோல் கார்டுகளை பயன்படுத்துவோரை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய இலவச கூப்பன் திட்டமொன்றை அறிவித்துள்ளது துபை போக்குவரத்துத் துறை (RTA). அதன்படி மேற்குறிப்பிட்டுள்ள சேவைகளுக்கு நோல் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு அது இந்த ஆண்டின் இறுதியில் இலவச கூப்பன்களாக பயனாளர்களுக்கு வழங்கப்படும்.

இந்த இலவச கூப்பன்களை பயன்படுத்தி உணவகங்கள், தேனீர் நிலையங்களில் உணவருந்தலாம். மேலும் சில பொழுதுபோக்கு அம்சங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!