அதிரையில் உள்ள குறிப்பிடத்தக்க பெரிய தெருக்களில் (இரண்டாவது முஹல்லாஹ்) கீழத்தெருவும் ஓன்று ஏறக்குறைய பத்தாயிரம் நபர்கள் வாழக்கூடிய தெருக்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது....இதன் பரப்பளவில் பெரிய விரிவாக்கத்துடன் கூடிய காட்டுப்பள்ளிதெரு, வெற்றிலைகாரத்தெரு, காழியார்தெரு, புதுகுடிநெசவு தெரு நகர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு மக்கள்கள் குடிபெயர்ந்து வருகிறார்கள்.
இப்பகுதிகளில் பிரபல தொழில் அதிபர்கள் வசிக்கக்கூடியவர்களாவும், அவர்களின் தொழிலாக விவசாயம் ( தென்னை, நெல் ) , தேங்காய் வணிகம், வியாபாரங்கள், சிறு விவசாய தொழிற் கூடங்கள், Water Service, Real Estate, Show Room, ICE Company, போக்குவரத்து வாகனங்கள், மளிகை கடைகள், ஹோட்டல்கள், பேன்சி கடைகள் என்றும் ஏழை எளியோர்களால் நடத்தக்கூடிய சிறிய தொழில்களான டீ கடை, பெட்டிக்கடை, சலூன்கள், சர்பத்-மோர் கடை, இட்லி-தோசை-இடியாப்பம் கடைகள் போன்றவைகளும் தொழிலாக உள்ளன.
குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்கள் தொழில் செய்யக்கூடியவர்களாகவும், பணிபுரியக்கூடியவர்களாவும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மேலும் இப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பெண்கள் தங்களது வீட்டு பொறுப்புகளையும், தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியை சார்ந்தவர்கள் ஆலிம்கள், ஆலிமாக்கள், சுதந்திர போராட்ட தியாகி, கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்றும், பிரபல அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளின் நிர்வாகிகளாகவும், அரசு ஊழியர்கள், பொறியாளர்கள், டாக்டர், அட்வகேட், கணினி வல்லுனர்கள், பட்டதாரிகள் எனவும் மருத்துவம், பொறியியல், கணினி, வணிகம், தொழிற்பயிற்சிகள் போன்ற படிப்புகளை பயிலும் மாணவ மாணவிகள் எனவும், மார்க்க கல்வியை பயிலும் சிறுவர், சிறுமிகள் எனவும் உள்ளனர்.
மேலும் விளையாட்டு துறைகளிலும் சிறந்து விளங்குகிற வாலிபர்கள், (ஹஜ்ரத் சேக் நசுருதீன் – தர்ஹா, Collage Ground) விளையாட்டு தளமாக்கிகொண்டு, விளையாட்டை ஊக்குவிக்கிற நண்பர்கள் போன்ற இவர்களால் நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகளால் இத்தெரு மேலும் சிறப்படைகிறது. இத்தெருவின் சார்பாக ஒரு பேரூராட்சி உறுப்பினர், ஒரு ரேஷன் கடையும் உள்ளது.
முக்கியமான பகுதிகளாக கருதப்படுகிற கீழ்க்கண்ட சிலவற்றை பார்ப்போம்....
பெரிய ஜும்மா பள்ளி
ஏறக்குறைய முப்பது ஆயிரம் சகோதரர்கள் வந்து அமர்ந்து தொழுவதற்கு இட வசதிகளுடன் கூடிய பெரிய ஜும்மா பள்ளியாக ஊருக்கே பெருமை சேர்க்கிறது. நமதூரில் உள்ள அனைத்து சகோதரர்களால் ஒருமுறையாவது வந்து ஜும்மா தொழுகையை தொழுத இப்பள்ளியில் பெரிய கஃபர்ஸ்தானுடன் இணைந்து உள்ளது குறிப்பிடதக்கது. இப்பள்ளியின் நிர்வாகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு சீரும் சிறப்புமாக காட்சி அளிக்கிறது.
செடியன் குளம்
சுமார் 3 ஹெக்டர் 39 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச்சேர்க்கிறது. நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒருமுறையாவது இக்குளத்தில் நீராடி சென்றுருப்பார்கள்.
அல் மதரஸ்ஸதுன் நூருல் முஹமதியா சங்கம்
இச்சங்கம் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுடன் சிறந்து விளங்குகிறது. இதன் நிர்வாகிகளால் தெருவில் நடக்கக்கூடிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பத்துடன், சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் போன்றவைகளையும் தீர்த்து, நல்ல பல ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இளைஞர்களால் நடத்தப்படுகிற இளைஞர் சங்கம் ( ISWAN ) னும், இத்தாய் சங்கத்துடன் இணைந்து இருப்பதால் கூடுதல் வலிமையுடன் என்னற்ற சேவைப் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இச்சங்கத்தின் மாடியில் சிறுவர், சிறுமிகளுக்கான “ அல் குரான் “ ஓதுதல் பயிற்சியும் வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும்.
அல் மதரஸ்ஸதுள் ஜாவியா
ஆன்மிகவாதிகளின் புகழிடமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் 40 நாட்கள் ஆலிம்கள் கலந்துகொண்டு புஹாரி ஷரிப் நடைபெற்று பின்னர் தப்ருக் வழங்கபடும். இதில் பெரியவர்கள், பெண்கள் ( பெண்களுக்காக தனிஇடம் ஒதுக்கப்பட்டுவுள்ளது ) ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சென்று இஸ்லாத்தின் அடிபடைகள் மற்றும் குரான் ஹதீஸ் கேட்டுபயனடைவார்கள்.
ஜாவியாவை ஒட்டி உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் நானா கடை அதிரையில் பழமை வாய்ந்தவை ஆகும் மேலும் இந்த இடம் எப்போதும். ரொம்ப பிசியாக காட்சியளிப்பது இத்தெருவிற்க்கு கூடுதல் சிறப்பாகும்.
தெற்கு பகுதியில் ( MSM நகர், KSA நகரையும் ) வடக்கு பகுதியில் ( ஹஜரத் பிலால் நகரையும் ) இப்பகுதிகளுக்கு இடையில் ECR ரோடு செல்கிறது சும்மார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கீழத்தெருக்கிடையில் இந்த ரோடு செல்கிறது ( இது மத்திய அரசால் இந்தியாவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை ).
ஹஜ்ரத் சேக் நசுருதீன் – தர்ஹா
கீழத்தெரு, மேலத்தெரு முஹல்லாக்கள் சார்பாக ஆண்டு தோறும் “ கந்தூரி விழா ” சிறப்பாக எடுக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை Shopping செய்து பயனடைகிறார்கள் மேலும் ” மீலாத் நபி விழா “ ஆண்டு தோறும் இவ்வரங்கில் நடைபெறுகிறது.
பெரிய மார்க்கெட்
கீழத்தெருவின் கிழக்கு பகுதில் அமைத்துள்ள அதிரையின் பெரிய மார்க்கெட் மற்றும் மேற்கு பகுதில் பெண்கள் மார்க்கெட் இம்மார்க்கெட்டுகளில் காய்கறிகள், இறால், மீன்கள், ஆடு, கோழி, காடை இறைச்சிகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பெண்களும் பொருள்களை வாங்கிச் சென்று பயனடைகிறார்கள்.
தொழில்மையங்கள்

கோட்டூறார் விறகு கடை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கோடூர்லிருந்து வந்து ஓர் சிறிய விறகு கடை வைத்து அதன் மூலம் முன்னேறியவர் மற்றும் என்னற்ற நண்பர்களை கொண்டவர் அதேபோல் நமது முகல்லாவில் சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து தொழில் மூலமாக முன்னேறியவர்கள் MM ஸ்டோர், தம்பி மளிகை, ஹைதர்அலி அரிசிமண்டி, நிஜாம் கறிக்கடை, கமால் கறிக்கடை, அப்துல்லாஹ் வெல்டிங் பட்டறை, சேக் ஏஜென்ஷிஸ் மற்றும் அலாவுதீன் கம்பிகடை கூடுதல் சிறப்பாகும்.
காதிர் முஹைதீன் கல்லூரி மற்றும் பெண்கள் மேல்நிலைபள்ளி
காதிர் முஹைதீன் கல்லூரியில் மாணவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து பட்டப்படிப்பு படித்துவருகின்றனர். மேலும் இக்கல்லூரியில் மேற்கு பகுதியில் குரான் பயில, மனனம் செய்ய, இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களை பயின்று ஆலிம்களாக செல்வதற்கு சலாஹியா அரபிக் கல்லூரி மிகச்சிறப்பாக செயல்படுகிறது.
மேலும் அதிரையின் மையப்பகுதில் அமைந்துள்ள. காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அணைத்து மாணவியர்களுக்கு கல்வி பயில மிகவும் பயனளிப்பது கூடுதல் சிறப்பாகும்.
இப்படிக்கு
கீழத்தெரு முஹல்லாஹ் Bro's
இறைவன் நாடினால் ! தொடரும்.....................
குறிப்பு : நமதூரில் உள்ள மற்ற தெருக்களின் சிறப்புகளும் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் !











20 comments:
கீழத்தெரு முஹல்லாஹ்வின் சிறப்புகளை அருமையாக பதிந்தத Adirai East நண்பர்களுக்கு நன்றி
அப்துல் ஜலீல்
கீழத்தெரு முஹல்லாஹ்வின் சிறப்புகளை அருமையாக பதிந்தத Adirai East நண்பர்களுக்கு நன்றி
புகைப்படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை பார்க்கும்போது காலை ஒன்பது மணிமுதல் மாலை ஆறு மணி வரை புகைத்து தள்ளியது போல் தெரிகிறதே.. சபாஷ்.. நல்ல முயற்சி என்று சொல்வதைவிட நல்ல உழைப்பு என்றுதான் கூறவேண்டும்..
கீழத்தெரு முஹல்லாஹ்வின் சிறப்புகளை அருமையாக பதிந்தத Adirai East நண்பர்களுக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்,
மஷாஅல்லாஹ் ... நமது தெரு சிறப்புகளை அருமையாக பதித்துல்லீர்கள் மற்றும் புகைப்படத்தின் துவக்கம் ஜும்மா பள்ளி முதல்
கடைத்தெரு வரை , நமது சங்கம் முதல் ECR , MSM நகர் வரை... இதில் முயற்சித்த அனைத்து AdiraiEast நண்பர்களுக்கும் என் வாழ்துக்கள் ..
நன்றி
கீழத்தெரு முஹல்லாஹ்வின் சிறப்புகளை அருமையாக பதிந்தத Adirai East நண்பர்களுக்கு நன்றி
அஸ்ஸலாமு அழைக்கும் ; கீழத்தெரு எழில் மிகு தோற்றம் அருமை அதன் சிறப்புகள் அதைவிட அருமை. ஜும் ஆ பள்ளி கம்பீர தோற்ற புகைபடம் அருமை. இது போன்று சொல்லி கொண்ட இருக்கலாம் மொத்ததில் கீழத்தெருவை அருமை தான். இந்த சிறப்புகளை பதிந்த முஹல்லா வாசிகளுக்கு மிக நன்றி கலந்த பாரட்டுக்கள். இது போன்று இன்னும் பல தெருக்களின் சிறப்புகளை பதிய வேண்டும் என்பது எனுடைய கருத்து.
கீழத்தெரு முஹல்லாஹ்வின் சிறப்புகள் அருமை. பெரிய ஜும்மா பள்ளி மற்றும் செடியன் குளம் மேலத்தெருவைச்சேர்ந்ததா அல்லது கீழத்தெருவைச் சோந்ததா
நமது தெருவில் மதிப்பும் மரியாதையுடன் வாழ்ந்த நம் முன்னோர்களையும் இத்துடன் ஞாபகப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பெரிய ஜும்மா பள்ளி மற்றும் செடியன் குளம்+ தர்ஹா. மேலத்தெரு + கீழத்தெரு 2 முஹல்லாஹ்வின் பொதுவாகும்.
supppper
கீழத்தெரு முஹல்லாஹ்வின் சிறப்புகள் அருமை மஷாஅல்லாஹ், கீழத்தெரு மற்றும் ISWAN நண்பர்களுக்கு நன்றி
Good goo
Good job
Good job
Good job
Good job
Good job
Good job
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!