
லண்டன்:உணவு வகைகளில் உப்பை குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேல்ட் கான்ஸர் ரிசர்ச்ஃபண்டின்(டபிள்யூ.சி.ஆர்.எஃப்) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு நிறைய கலந்த உணவுகள் வயிற்று புற்றுநோய்க்கு காரணமாவதுடன், இரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றை தோற்றுவிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
உப்பின் உபயோகம் தினமும் 6 கிராமுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுல் புற்றுநோய் பாதித்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவுச் செய்கின்றனர். இவர்களில் 15 சதவீதம் பேராவது உப்பை கட்டுப்படுத்தியிருந்தால் புற்றுநோய் வராமல் தடுத்திருக்கலாம் என டபிள்யூ.சி.ஆர்.எஃப் கூறுகிறது.
உப்பின் அளவை உணவுப் பொருட்களின் கவரில் குறிப்பிட வேண்டும் என கூறுவது இதன் அடிப்படையிலாகும் என கேன்ஸர் ரிசர்ச் சென்டர் உறுப்பினர் லூஸி போய்ட் கூறுகிறார்

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!