
டெல்லி:லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், சுஷில் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங், யோகேஷ்வர் தத், சாய்னா நெவால், மேரி கோம் ஆகியோருக்கு பிரதமர் தனது இல்லத்தில் விருந்தளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க தலைவர் (பொறுப்பு) விஜய் குமார் மல்ஹோத்ரா, பொதுச் செயலர் ரந்திர் சிங், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருடன் வீரர், வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பாராட்டு விழாவும் நேற்று நடைபெற்றது.
துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராணுவ சுபேதார் மேஜர் விஜய் குமாருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ரூ. 30 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
விஜய் குமாரின் பதவி உயர்வுக்கு பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று அந்தோனியிடம் கோட்டபோது, ‘இது தொடக்கமே, எதிர்காலத்தில் அவருக்கு நிறைய பதவிகள் வரும்’ என்றார்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!