
பகட்டான மனிதர்கள்
பல்லிளிக்க பேசி
பகையவனிலும் கொடிய
குணம் கொண்டவாராய்
பாரினிலே உலாவரும்
பச்சோந்திகளே
முதுகில் குத்தும்
சுயநலத்தின் போர்வையிலே
பொதுநலத்தை புனைந்திட்டு
தூயவராய் துகில் பாடி
துவேசமனம்
கொண்டவர்கள் தான்
முதுகில் குத்தும்
மனிதர்கள்
அகமொன்றும் புறமொன்றும்
அபிநயிக்கும் வித்தை கற்று
ஆறாத ரணமாக
ஆழ்மனதை ஆக்கிடும்
அர்த்தமற்ற உறவார்தான்
முதுகில் குத்தும்
மனிதர்கள்
காரியத்தில் கண்வைத்து
கண்ணியமாய் உரைநடத்தி
மாறுபட்ட தோற்றத்திலே
மாறி மாறி வேஷமிடும்
மனம் படைத்தவர்களே
முதுகில் குத்தும்
மனிதர்கள்
தற்பெருமை தலைக்கணமாய்
தன்புகழை தரணி போற்ற
தக்க சமயத்தில் உறவாடி
தயங்காது களையருக்கும்
தரமில்லா வர்க்கம் தான்
முதுகில் குத்தும்
மனிதர்கள்
நேசமெனும் வார்த்தைக்கு
நீங்காத கலங்கமெய்து
நட்பு எனும் சொல்லுக்கு
நா தனிலே நச்சிட்ட
நயவஞ்சக மனிதர்களே
முதுகில் குத்தும்
மனிதர்கள்
நிலையில்லா வாழ்க்கையிலே
நிலைமாறும் மனிதனிவன்
பார்ப்போரும் பணிந்திடவே
பாவனையை அரங்கேற்றும்
பன்நடிப்பு கற்றவரே
முதுகில் குத்தும்
மனிதர்கள்
மனிதநேயம் தழைத்தோங்க
மாறாக நாம் வாழ்ந்து
புறமுதுகில் குத்தாத
புண்ணியனாய்
பார் போற்ற
வாழ்ந்திடுவோம்
பகையோரையும்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!