புதிய மாற்றங்களுடன் பாஸ்போர்ட்: நாளை முதல் புழக்கத்தில்! ! !



புதிய மாற்றங்களுடன் பாஸ்போர்ட்: நாளை முதல் புழக்கத்தில்! ! ! !

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாஸ்போர்ட்டில் புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும்... மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் அடங்கிய புதிய பாஸ்போர்ட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகின்றன என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, பாஸ்போர்ட்டின் இடதுபக்க உள் அட்டையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும்,அவருடைய புகைப்படமும் இருக்கும். அதே போல், வலதுபக்க உள் அட்டையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால் தற்போதைய புதியநடைமுறைப்படி இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில் லேமினேட் செய்யப்படும். அதேபோல்,வலதுபக்க உள் அட்டையில் காணப்படும் அனைத்து குறிப்புகளும் 35வது பக்கத்தில் லேமினேட் செய்யப்படும்.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பழைய முறையில் பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது என்றார்.

இம்மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருவதால் புதிய மாற்றங்கள் அடங்கிய 50,000 பாஸ்போர்ட்கள் நாசிக்கில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் புதிய பாஸ்போர்ட்கள் புழக்கதிற்கு வரவுள்ளன.

2 comments:

ஹபீப் HB said...

பதிவுக்கு நன்றி பயனுள்ள தகவல்.

Kuthbudeen Farook said...

Useful information...

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!