அமீரகத்திலுள்ள அனைத்துப்பள்ளிவாசல்களிலும் இப்ஃதருக்கான உணவுகள் வழங்கப்பட்டாலும் துபையில் தற்போது அதிகபட்ச வெப்பமும், புழுக்கமும் நிலவி வருவதால் பெரும்பாலோனோர் இப்புனித மிக்க ரமலான் நோன்பை திறக்க தேவையான உணவுகளை தாங்களின் வசிப்பிடங்களிலேயே தயாரித்து நோன்பு திறந்து கொண்டு வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் அதிரைச்சகோதரர்களின் பங்கு அதிகமாக காணப்படுகிறது.நம் அதிரைச் சகோதரர்களின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் நோன்பு காலங்களில் நமதூரில் பிரசித்தி பெற்ற நோன்புக்கஞ்சியை சுவை மணத்துடன் தயாரிப்பதில் இங்குள்ளவர்களும் சளைத்தவர்களல்ல.என்று நிரூபிக்கும் வண்ணம் நமதூர்வாசிகள் சுவையுடன் தயாரிப்பதில் வல்லவர்களாகவே விளங்குகின்றனர். பெண்களுக்கு நிகராக அனைத்து சமையல் தயாரிப்புக்களையும் அறிந்தவர்களாகவும் திகழ்கின்றனர். காரணம் நீண்ட நாட்கள் நமது வாழ்க்கையை இங்கு தான் கழித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத ஒப்பந்தமாக தமது காலத்தை அயல் நாட்டில் கழித்து வரும் இங்குள்ளவர்களின் மனம் காசு, பணம் சம்பாரிப்பதில் மட்டுமல்ல சரீர சுகத்துடன் இருக்க வேண்டுமென்பதற்காகவே சமையலையும் சொந்தமாகவே சமைக்கக்கற்றுக்கொண்டு காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொண்டது தான் உண்மை.
நோன்புக்கஞ்சியுடன் மேலும் சொந்தமாக சுவையாக தயாரிக்கப்பட்ட கீரைபோண்டா, பஜ்ஜி,ரோஸ் மில்க் சர்பத்துடன் தர்ப்பூஸ் பழம்,ஆரஞ்சுப்பழங்களுடன் மனம் நிறைவாய் நோன்பை திறந்து மகிழ்ந்தனர்.
நமது சொந்தபந்தங்களை பிரிந்து கிடக்கும் நிலையில் இங்கு கவலைப்பட வாய்ப்பில்லாமல் சந்தோசமாக இருக்க காரணம் இத்தகைய ஷேரிங் அக்கமெண்டேசனில் ஒற்றுமையுடன் கூடி உண்று மகிழ்ந்து வாழும் ஒரு உறவு முறையேயாகும். .
அதன் ஒரு பகுதியாக தேரா துபை பிரிஜ் முரர் பகுதியில் வசிக்கும் நமது அதிரைச் சகோதரர்கள் ரூமில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியே கீழ் காணும் புகைப்படங்கள்.

புகைப்படம் & செய்தித்தொகுப்பு துபையிலிருந்து அதிரை மெய்சா
[அதிரை நியூஸ் & அதிரை ஈஸ்ட் பதிவாளர்]

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!