Showing posts with label அமீரக செய்தி. Show all posts
Showing posts with label அமீரக செய்தி. Show all posts

புனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், மெட்ரோ இயங்கும் நேரங்கள் அறிவிப்பு!


மே 17 2018 முதல் அமீரகத்தில் புனித ரமலான் மாதம் துவங்குவதையொட்டி துபை எமிரேட்டின் பார்க்கிங், பஸ், மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு இந்திய தூதரகத்திலேயே நன்னடத்தை நற்சான்றிதழ்!


அமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு இந்திய தூதரகத்திலேயே நன்னடத்தை நற்சான்றிதழ்!

அமீரகத்தில் அடுத்து 3 ஆண்டுகளுக்கு சேவைக் கட்டணங்கள் ஏற்றம் இல்லை!

அமீரகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை இன்னும் அதிகமாக ஈர்ப்பதற்காகவும் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்துவதற்காகவும் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு மத்திய பெடரல் அரசு சார்பாக வசூலிக்கப்பட்டு வரும் சேவைக்கட்டணங்களை ஏற்றுவதில்லை என அமீரகப் பிரதமரும் துணை ஜனாதிபதியும் துபை எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில்லை!




அமீரக வேலைவாய்ப்பு விசா பெறுவதற்கு நன்னடத்தை நற்சான்றிதழ் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்ததை தொடர்ந்து புதிதாக அமீரகத்திற்கு வேலை தேடி வருவோர் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். இந்தியாவில் இதுபோன்ற நன்னடத்தை நற்சான்றிதழ் வழங்கும் மையப்படுத்தப்பட்ட அமைப்பு எதுமில்லாத நிலையில் கேரளா போன்ற மாநிலங்களில் அரசுகள் தங்களின் சுயமுயற்சியின் கீழ் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகங்கள் வழங்கும் தடையில்லா போலீஸ் சான்றிதழையே மாற்று நன்னடத்தை சான்றிதழாக அமீரக தூதரங்களை ஏற்கச் செய்தனர்.

அமீரகதின் கீழத்தெரு இளைஞர்கள் நலசங்க கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு.




துபாயில் அதிரை கீழத்தெரு இளைஞர்கள் சமூக நல சங்கம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு மூலம், முஹல்லா சார்ந்த நலத்திட்டப்பணிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் துபாய் பேமிலி சூப்பர் மார்க்கெட் அருகில் உள்ள LMI அப்பாஸ் பழைய ரூம் மாடியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முஹல்லாவாசிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

துபாய் சஃபாரிக்கு இரண்டு வாரங்கள் இலவச அனுமதி!!


துபை இயற்கை சூழல் வனவுயிரின காட்சிக்கு 2 வாரம் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் அரசுத்துறைக்கான புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு.




அமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு விடுமுறை  டிசம்பர் 31, 2017 (ஞாயிற்றுக்கிழமை)  மற்றும் ஜனவரி 1, 2018 (திங்களன்று) அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

துபையில் சாலிக் மற்றும் பொது போக்குவரத்திற்கு வாட் வரி விலக்கு !



துபையில் சாலிக் மற்றும் பொது போக்குவரத்திற்கு வாட் வரி கிடையாது

23 வது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF) டிச. 26 முதல் ஆரம்பம்!


23வது ஆண்டாக நடைபெறவுள்ள உலக பிரசித்திப் பெற்ற 'துபை ஷாப்பிங் பெஸ்டிவல்' (DSF - Dubai Shopping Festival) எனப்படும் ஷாப்பிங் திருவிழா எதிர்வரும் 2017 டிசம்பர் 23 ஆம் தேதி துவங்கி 2018 ஜனவரி 27 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலிருந்தும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு .


அமீரகத்தில் தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுவதால் அரசுத்துறை ஊழியர்களுக்கு 4 நாட்களும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 3 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்ததே.

அமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு!


அமீரகத்தில்  தனியார் துறை ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீலாது நபி, தியாகிகள் தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுவதால் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் விபத்துகளை குறைக்க நிறம் மாறும் சாலைகள்!


துபாயில் கடுமையான சாலை விதிகள் பின்பற்றப்பட்டாலும் ஒரு சில சாலை விபத்துகள் நடக்கத்தான் செய்கின்றன. அந்த ஒருசில சாலை விபத்துகளையும் தடுத்து விபத்துகளே இல்லாத சாலைகளாக மாற்ற 'Mission zero accident' என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ளது #துபாய் சாலை போக்குவரத்து நிறுவனம்.தற்போது வாகனங்களில் பயணிப்பவர்களில் 1,00,000 பேருக்கு 6 பேர் விபத்தில் சிக்குவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதை 2021ம் ஆண்டுக்குள் 1,00,000 பேருக்கு 3 பேராக குறைக்கவும் பிறகு அதை 0 என்ற நிலைக்கு மாற்றவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.அனைத்து சாலைகளும் ரேடார் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக சென்றாலோ, சாலை விதிகளை மீறினாலோ சாலை ஓரங்களில் உள்ள தானியங்கி கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகிறது.

எச்சரிக்கை!!!. சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்பவரா !!!



இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு வருபவர்களில் அதிகமானவர்கள் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்கள் (Recruitment Agencies) மூலமாக வருகிறார்கள். இப்படி வரும் போது பெரும்பான்மையான நிறுவனங்கள் சரியான முறையில் செயல்பட்டு வந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமலும், உரிமம் இல்லாத நிறுவனங்களாகவும் இருக்கின்றன.

அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!


அமீரகத்தில் மீலாதுன்னபி, தியாகிகள் தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவை இம்மாத இறுதியில் வரவுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

துபை - ஷார்ஜா இடையே 200 மில்லியன் திர்ஹத்தில் புதிய மேம்பாலம் !


ஷார்ஜா துபை இடையே நிலவும் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் தலைவலி. இந்த இரு எமிரேட்டுகளிடையே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்படுகின்றன என்றாலும் குறைந்தபாடில்லை.

அமீரக பள்ளியின் கின்னஸ் சாதனையில் ஒருவனாக அதிரை மாணவன் !!!

இன்று 14-11-2017 இந்திய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் உள்ள இந்தியன் இண்டெர்னேசனல் பள்ளியில் 4882 மாணவ மாணவிகள் சேர்ந்த மிகப்பெரிய மனித கப்பலை UAE கொடி வடிவத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இதில் அடங்கியுள்ளனர். இங்கு அதிரை கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த ரஃபி என்பவரது மகன் 1 ஆம் வகுப்பு மாணவன் முஹம்மது ஷாரிக்கும் இந்த அணிவகுப்பில் பங்கேற்று இந்த கின்னஸ் சாதனை

அமீரகம் துபாயில் நடைபெற்ற கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக் கூட்டம்.!

அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 14/11/2014 வெள்ளிக்கிழமை இஷாஹ் தொழுகைக்கு பின் அப்பாஸ் ரூம் மாடி மேல்தளத்தின் வளாகத்தில் அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சிறப்புடன் ஆரம்பமானது.   


இக்கூட்டத்தில் நல்ல பல தீர்மானங்களும் பல செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கீழத்தெரு மஹல்லா முன்னேற்றத்திற்கான பயனுள்ள செய்திகள் கலந்துரையாடப்பட்டன. கீழத்தெரு மஹல்லா வாசிகளின் பல கோரிக்கைகளும் கேட்டு அறியப்பட்டன.


கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள்  


1,மழைகாலங்களில் பிலால்நகர் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதற்க்கு சரியான வடிகால் அமைத்து அந்தத் தண்ணீரை நமது கீழத் தெரு மஹல்லா விற்கு உட்பட்ட செய்னான் குளத்திற்கு கொண்டு வந்து நிரப்புவது  குறித்து பேசப்பட்டன.


2, செடியங் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர பாடுபடும் கீழத்தெரு, மேலத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேலும்  வேண்டிய  உதவிகள் செய்ய கீழத் தெரு மஹல்லா தலைமை நிர்வாகிகளுக்கு அறியப்படுத்துவது குறித்து பேசப்பட்டன.


3,இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் முதல்  நோன்பில் விநியோகிக்கப்படும் ஃபித்ரா தொகையை அதிகப்படுத்தி கொடுப்பது பற்றி பேசப் பட்டன.


4,நமதூர் ஜாவியாவில் கட்டிவரும் கல்யாண  மண்டபம் வேலை  பூர்த்தியாவதற்கு கீழத்தெரு மஹல்லா சார்பாகவும் உதவி செய்வது குறித்தும்  பேசப்பட்டது






    



இன்னும் பல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு,
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்


செய்தித் தொகுப்பு & புகைப் படங்கள்
அதிரை.மெய்சா [ அதிரை நியூஸ் ]

அமீரகம் துபாயில் நடைபெற்ற கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக் கூட்டம்.!


அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 06/12/2013 வெள்ளிக்கிழமை அன்று இஷாஹ் தொழுகைக்கு பின் அப்பாஸ் ரூம் மாடி மேல்தளத்தின் வளாகத்தில் அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் S.முகைதீன் அப்துல் காதர் கஹ்ராத் ஓதி சிறப்புடன் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் நல்ல பல தீர்மானங்களும் பல செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. முஹல்லாவசிகளும் நமதூர் வாசிகளும் பயன்பெற அரசு அறிவித்துள்ள திருமண உதவித்தொகை பெற பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எளிய வழிமுறை ஆலோசனைகள் இன்னும் பல மஹல்லா முன்னேற்றத்திற்கான பயனுள்ள செய்திகள் கலந்துரையாடப்பட்டன. கீழத்தெரு மஹல்லா வாசிகளின் பல கோரிக்கைகளும் கேட்டு அறியப்பட்டன.

கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள் :
1,கீழத்தெரு அலியார் சார் அவர்கள் வீட்டில் நடைபெற்றுவரும் அரசு நியமித்த சிறு குழந்தைகளுக்கான பாலகர் பள்ளி சிறப்புடன் நடந்துவருகிறது. இப்பள்ளியில் கல்வியுடன் உணவும் வழங்கப்படுகிறது. ஆகவே இதுகுறித்து அறியாதோர்களுக்கு அறியப்படுத்தி மேலும் குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில முயற்ச்சிகள் மேற்கொள்வது.! .

2,மருத்துவர்கள் ஆலோசனையின்பெயரில் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசியை பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் போட்டுக்கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது.!

3,கீழத்தெரு மஹல்லாவில் இரண்டு மக்தப் பள்ளிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மூன்றாவது மக்தப் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.மேலும் ஒரு மக்தப் பள்ளி விரைவில் காட்டுப்பள்ளித் தெருவிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. அருகில் வசிக்கக்கூடியவர்கள் தாங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மார்க்கக் கல்விகற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப் படுகிறது.

4,இன்ஷா அல்லாஹ் நமது அடுத்த கூட்டம் செயற்குழு கூட்டமாக இருக்கும். அமீரக கீழத் தெரு மஹல்லாவின் புதிய தலைமை, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆகவே அனைத்து நமது மஹல்லாவாசிகளும் தவறாது கலந்து கொள்ள அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப் படும்.

இன்னும் பல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு,
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்
புகைப் படங்கள் : S.அஜீஸ் & S.ஹபீப்
செய்தித் தொகுப்பு : அதிரை.மெய்சா









 
நன்றி அதிரை நியூஸ்

அமீரகம் துபாயில் நடைபெற்ற கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக் கூட்டம்.!


அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 04/10/2013 வெள்ளிக்கிழமை அன்று இஷாஹ் தொழுகைக்கு பின் அப்பாஸ் ரூம் மாடி மேல்தளத்தின் வளாகத்தில் அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் A.இஸ்மாயில் கஹ்ராத் ஓதி சிறப்புடன் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் நல்ல பல தீர்மானங்களும் பல செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கீழத்தெரு மஹல்லா வாசிகளின் பல கோரிக்கைகளும் கேட்டு அறியப்பட்டன.
 

கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள் :


1,கீழத்தெரு மஹல்லாவுக்கு உட்பட்ட செய்னாங்குளத்தை தூர்வாரி அப்பணியை நல்லபடி செய்து முடித்தமைக்காக அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது.

2,கீழத்தெரு மஹல்லாவில் இரண்டு மக்தப் பள்ளிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மூன்றாவது மக்தப் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருவதால் நியமிக்கப்பட்டு இருக்கும் உஸ்தாதுக்கான மாத சம்பளம் கொடுக்க ஸ்பான்சரை ஏற்ப்படுத்துவது பற்றி பேசப்பட்டன.

3,நமதூருக்கு இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள் அவசியம் தேவைப்படுவதால் நமதூரில் இயங்கி வரும் ஷிஃபா மருத்துவ மனையில் பகல் நேரத்தில் பணிபுரியும் டாக்டர்களில் யாராவது ஒரு டாக்டரை இரவுப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று அதன் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்துவது பற்றி பேசப்பட்டன.

4,காட்டுப்பள்ளி அருகில் கட்டப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் பொது சுகாதார வளாகத்தை பற்றி நமதூர் பேரூராட்சி தலைவருக்கு மீண்டும் கடிதம் எழுதி கேட்பது பற்றி பேசப்பட்டன.

5,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்று டேரா துபாய் ஈத்கா மைதான வளாகத்தில் நடக்கும் அனைத்து மஹல்லா அதிரையர்களின் சந்திப்பின் போது கீழத்தெரு மஹல்லா வாசிகள் அனைவர்களும் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டு தெரு மற்றும் ஊர் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

6,துபையில் இயங்கி வரும் கீழத்தெரு மஹல்லாவின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என்று ஒருமனதாய் தீர்மானித்துள்ளதால் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆகவே இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டத்திற்கு துபையில் வாழும் அனைத்து கீழத்தெரு மஹல்லா வாசிகளும் தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

மற்றபல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.


இப்படிக்கு,
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்

புகைப்படங்கள் : குத்புதீன்

செய்தித்தொகுப்பு : துபையிலிருந்து அதிரை மெய்சா










அமீரகம் ஷார்ஜாவில் நடந்த உலக கின்னஸ் சாதனை இஃப்தார் நிகழ்ச்சி ! [ புகைப்படங்கள் ]

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரிய நகரில் ஒன்றான ஷார்ஜாவில் 20/07/2013 சனிக்கிழமை அன்று ஷார்ஜாவின் மிக நீளமான அழகிய கடற்க்கரையைக் கொண்ட புஹைரா கார்னிச் பகுதியில் கின்னஸ் சாதனையாக இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.

600 மீட்டர் நீளத்தில் இருக்கையுடன் கூடிய நீண்ட டேபிள் அமைத்து  இஃப்தருக்கான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் சிறுவர் சிறுமியர்களென  பன்னாட்டவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒரு சில அதிரைச் சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.இந்த இஃப்தார் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் புகைப்படங்கள் இதோ....


















புகைப்படங்கள் & செய்தித்தொகுப்பு : அதிரை நியூஸ் & அதிரை ஈஸ்ட் பதிவாளர் அதிரை மெய்சா