
இன்னும் சில தினங்களில் ரமலான் என்னும் புனித மிக்க மாதம் நம்மிடையே வர
இருக்கின்றது. அதிரையில் தற்போதைய இளைஞர்களின் மன நிலை ரமலான் என்றாலே இரவு
நேரங்களில் ஊரை சுற்றுவது, முதியோர்கள் மற்றும் பச்சிலும் குழந்தைகளை
உரங்க விடாமல் விளையாட்டு என்ற பெயரில் அட்டூழியங்களில் ஈடுப்படுவது என
இவர்களின் செயல்களால் அதிரையில் இருக்கும் மாற்று மதத்தினர் கூட இஸ்லாத்தை
பற்றி தவறாக புரிந்துக்கொள்ளும் மன நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதை தடுத்து நிறுத்த அதிரையில் சமுதாய இயக்கங்கள் என தங்களை விளம்பரம்
படுத்திக்கொள்ளும் எந்த ஒரு இயக்கங்களும், சங்கங்களும் சமுதாய தொண்டு
நிறுவனங்களும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்த
அட்டூழியங்களை தடுத்து நிறுத்த துனிவு இல்லாத பொழுது இத்தனை சமுதாய
இயக்கங்கள், சங்கங்கள் இருந்து என்ன பயன்? ரமலானில் நன்மைகளை அள்ள ஜக்காத்
மற்றும் சதக்கா நிதிகளை வசூல் செய்வதில் போட்டிபோட்டு காட்டும் ஆர்வத்தை
தீய செயல்களில் ஈடுப்படும் இஸ்லாமிய இளைஞர்களை பாதுகாப்பதில் காட்டாதது
ஏன்?
இதுவரையிலும் நம்மிடையே பல ரமலான் மாதங்கள் வந்து சென்று விட்டன அதில்
நடந்த பல வற்றை நாம் நேரிலும் பார்த்துள்ளோம். அமல்களால் நிறப்ப பட வேண்டிய
இந்த மாதத்தில் அரசு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்ப்படுத்துவது குறிப்பாக
தெரு விளக்குகளை கற்கள் எரிந்து உடைப்பது, குழுவாக சேர்ந்துக் கொண்டு சன்டை
போடுதல், சிறு சிறு திருட்டுகள் என பல மார்க்கத்திற்கு புறம்பான
செயல்களில் நமது இளைய சமூகம் ஈடுப்படுவது வருத்தப்பட வேண்டிய விடயம்.
மேலும் இங்கு பெற்றோர்களை பற்றியும் நாம் கூறி ஆக வேண்டும். குடும்பத்தில்
முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர்கள் தங்கள் பிள்ளைகளை தண்டிக்க
தயங்குகின்றனர். தன் பிள்ளை என்ன தான் தவறு செய்தாலும் அதனை
ஏற்றுக்கொள்ளும் மன நிலை இவர்களிடம் காணப்படுவதில்லை. இதனால் இந்த
அட்டூழியங்களின் துளி அளவும் தயக்கமில்லாமல் ஈடுப்படுகின்றனர்.
இரவு நேரங்களின் வீதி உலா வரும் இவர்களிடம் ஏன் இது போன்று தேவையில்லாமல்
ரமலான் மாதத்தில் ஊரை சுற்றுகின்றீர்கள் என கேட்டால் நாங்கள்
தொழசெல்கின்றோம் என பலர் பொய்யும் சொல்கின்றனர்.
மொத்தத்தில் தவறுக்கு மேல் தவறு செய்கின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும்
விதமாக வருடா வருடம் ரமலான் மாதத்தில் இரவு நேர சிறப்பு கடைகள் இசை
வெள்ளத்தில் மிக சிறப்பாக தங்கள் சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேல் கண்ட அனைத்தையும் தடுத்து நிறுத்த முதலில் நமது இளைய சமூகத்தை வழி கெடுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு புறம்பாக இசை வெள்ளத்தில் மிக சிறப்பாக செயல்பட கூடிய இரவு நேர சிறப்பு கடைகள் அனைத்துக்கும் இந்த வருட ரமலானில் தடைவிதிக்க வேண்டும். இதனை முன்னெடுத்து செய்வதற்க்கு நமதூரில் இஸ்மாமிய இயக்கங்கள் கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ முன்வர வேண்டும்.
சமுதாய பொறுப்புனர்ந்து இதனை செய்வதற்க்கு யார் முன்வர போகிறார்கள்?
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!