புதிதாக பொறுப்பேற்ற தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் அதிரைக்கு வருகை ! அதிரையின் பல்வேறு அமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் !

கடந்த [ 24-05-2013 ] அன்று தமிழகம் முழுவதும் 34 போலீஸ் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிறப்பித்து இருந்தார்.
அதன் படி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இருந்த அன்பு அவர்கள் சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாகவும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜி.தர்மராஜன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டனர்.

பதவி உயர்வு பெற்றபின் முதல் முறையாக நேற்று [ 04-07-2013 ] மாலை 7 மணியளவில் அதிரை காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் அவர்களை அதிரைப் பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் , தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் அன்வர் அலி, பீர் முஹம்மது, ஹாஜி ஆகியோரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Z. முஹம்மது இலியாஸ் அவர்களின் தலைமையில் அக்கட்சியின் அதிரை நகர நிர்வாகிகள் முஹம்மது, சம்சு, சலீம், தெளஃபிக் ஆகியோரும், அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, லியோ சங்கம் மண்டலத் தலைவர் நியாஸ் அஹமது மற்றும் முஹம்மது இஸ்மாயில், அதிரை வர்த்தக சங்க நிர்வாகியும், மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் V.T. தஹளா மரைக்காயர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

சந்திப்பின் போது பட்டுக்கோட்டை டிஎஸ் பி வெங்கடேசன், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , ராஜ்கமல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!