இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை!



பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்க்குகளில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. 

இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நேற்று வெளியிட்டார். 

இதன்படி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இந்த கம்பெனிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும். 

மேலும் பிற நிறுவனங்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த சிலிண்டர்களை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. இதற்காக அந்த பங்க்குகளில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் மானியமற்ற விலையில் அதாவது மார்க்கெட் விலைக்கே விற்பனை செய்யப்படும். அதன்படி முதல் முறை வாங்கும் போது சிலிண்டருக்கு ரூ.1000 மற்றும் வரியும், ஒரு ரெகுலேட்டருக்கு 250-ம் வரியும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். 

வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை, அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றுடன் இந்த சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம். சரியான அடையாள அட்டை மற்றும் முகவரிச்சான்று இல்லாதவர்கள் சிலிண்டர் பெற முடியாது. 

இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும், சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி டெல்லி, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.
தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

அப்துல் ஜலீல்.M said...

பதிவுக்கு நன்றி

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!