திருச்சி விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் இலவசம்: ஏப். 1 முதல் ஆணையமே வசூல்.!


திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும் என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது : திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், வாகன நிறுத்த கட்டணத்தை தனியார் நிறுவனம் வசூலித்து வந்தது.  தற்போது விமான நிலைய ஆணையமே வாகன நிறுத்தத்தை நிர்வகிக்க உள்ளது.
கட்டண விவரம்:

விமானநிலையத்துக்குள் சொந்த, வாடகை வாகனத்தில் வந்து, 3 நிமிஷங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட்டு  ஏற்றிச்(பிக்-அப்) செல்ல கட்டணம் செலுத்த தேவையில்லை. 
ஆனால், வாடகை வாகனங்களில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமெனில், விமான நிலையத்துக்குள் நுழைவுக் கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும். 
விமானநிலையத்தில் வாகனங்களை நிறுத்த 30 நிமிடங்கள் வரை:

பேருந்து, டிரக், வேன் - ரூ.30, 
கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள்  - ரூ.20, 
இருசக்கர வாகனம் - ரூ.10 
30 நிமிடத்திலிருந்து 2 மணி நேரம் வரை நிறுத்த

பேருந்து, டிரக், வேன் - ரூ.70, 
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.60, 
கார் - ரூ.55, 
இருசக்கர வாகனம் - ரூ.15 
2 மணி நேரத்துக்கு மேல், 7 மணி நேரம் வரை
நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ஒரு மணி நேரத்துக்கு ரூ.10, 
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படும்.
7 மணி நேரம் முதல் 2 நாள்கள் வரை...:

விமான நிலைய வளாகத்தில் 7 மணி நேரத்துக்கு மேல் 24 மணி நேரம் வரை நிறுத்த

பேருந்து, டிரக், வேன் - ரூ.210, 
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.180,
கார் - ரூ.165,
இருசக்கர வாகனம் - ரூ.45
24 மணி நேரத்துக்கு மேல் 36 மணி நேரம் வரை

பேருந்து, டிரக், வேன் - ரூ.315,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.270,
கார்  - ரூ.247.50,
இருசக்கர வாகனம் - ரூ.67.50 
48 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு
பேருந்து, டிரக், வேன் - ரூ.420, 
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.360, 
கார் - ரூ.330, 
இருசக்கர வாகனம் - ரூ.90  
பாதுகாப்புக் காரணங்கள் கருதி 48 மணி நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்க அனுமதியில்லை. 
பயணத்தின்போது 2 நாள்களுக்குள் வர முடியாமல் இருந்தால், அதுகுறித்து வாகனத்தின் ஆர்.சி புத்தக நகலுடன் விமானநிலைய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் கடிதம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வழியில் நிறுத்தினால் அபராதம் : வாகனங்களை அவற்றுக்குரிய  தளத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். 
வேறு பகுதிகளில் நிறுத்தினால் அபராதம்:
பேருந்து, டிரக், வேன் - ரூ.280, 
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து - ரூ.240, 
கார்  - ரூ.220, 
இருசக்கர வாகனம் - ரூ.60 அபராதம் வசூலிக்கப்படும்.  
இந்த நடைமுறை  6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும்  என்றார் அவர். 
3 நிமிடம் போதாது: விமான நிலையத்துக்குள் பயணிகளை ஏற்றிஅல்லது இறக்கிவிட வரும் வாகனங்களுக்கு 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த  குறிப்பிட்ட நேரத்துக்குள்  விமான நிலையத்தை விட்டு வெளியே வருவது என்பது இயலாத காரியம். எனவே, பழையபடியே கால அவகாசத்தை 5 நிமிடங்களாக்க வேண்டும்  என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 comments:

Anonymous said...

Emperor Casino | Shootercasino
Enjoy casino slots and casino games with 제왕카지노 the best 카지노 payouts at a หาเงินออนไลน์ top rated casino. With over 1,000 free spins games available. Slots, Blackjack, Roulette,

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!