பிலால் நகர்-ஆதம் நகர்-மேலத்தெரு-கீழத்தெரு-நடுத்தெரு-புதுத்தெரு-கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு முக்கிய அறிவிப்பு !


பிலால் நகர்-ஆதம் நகர்-மேலத்தெரு-கீழத்தெரு-நடுத்தெரு-புதுத்தெரு-கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு முக்கிய அறிவிப்பு !
அதிரை ஏரிப்புறக்கரை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் ஏரிப்புறக்கரை கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட பிலால் நகர்-ஆதம் நகர்-மேலத்தெரு-கீழத்தெரு-நடுத்தெரு கீழ்புறம்-புதுத்தெரு-கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் சரகம் ஏரிப்புறக்கரையில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. டிஆர்ஓ சுரேஷ்குமார் தலைமை வகிக்கிறார். இதில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி விதவை உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டம் மற்றும் தொடர்புடைய மற்ற நலத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் பட்டா மாறுதல், சான்றுகள் குறித்தான மனுக்களை முன்னதாகவே பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, சுகாதாரத்துறையினரால் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ முகாம், கால்நடை முகாம், ஆதார் அடையாள முகாம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடத்தப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு டிஆர்ஓ சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன் + அதிரை நியூஸ்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!