அபுதாபி: மெர்ஸ் என்ற வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் இறந்து விட்டதாக அபுதாபி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மெர்ஸ் என்றழைக்கப்படும் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி ஸிண்ட்ரோம் என்ற வைரஸ் சவுதி அரேபியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு சவுதி அரேபியாவில் ஏறத்தாழ 50 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வைரஸ் அமீரகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நோய் காரணமாக ஒரு பெண் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தப் பெண் ஜோர்டான் நாட்டினைச் சார்ந்தவர் என்றும், அவருடைய கணவரும், மகனும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவி்த்துள்ளது. இவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 19 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருவர் கத்தர் நாட்டில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!