அரசின் கல்வி உதவி தொகை பெற வங்கி கணக்கு எண் வசதி இலவசமாக ஏற்பாடு !

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின ( இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள் ) மாணவ – மாணவிகளுக்கு 2014-2015 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2014-15ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் பெறப்படுவதை அடுத்து கல்வி உதவித்தொகை பெறுவதற்காக பொதுமக்கள் மும்முரமாக தேவையான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.


அரசு வங்கியின் மூலமே கல்வி உதவி தொகையை பயனாளிகளுக்கு வழங்கி வருவதால், ஒவ்வொரு பயனாளிகளும் வங்கி கணக்கு எண் பெறுவது அவசியமாக இருந்து வருகிறது.

இதற்காக வங்கிகளுக்கு சென்று புதிதாக வங்கி கணக்கை துவக்கி வருகின்றனர். இந்த பணிகளுக்காக நமதூர் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் எதிரே அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் நமதூரை சேர்ந்த சேக் அப்துல்லா அவர்கள் பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக புதிதாக வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கல்வி உதவி தொகை பெற நினைக்கும் பெற்றோர்கள் தேவையான ஆவணங்களுடன் இவரை அணுகி பயனடையலாம்.

மேலும் விதவை - முதியோர் - மாற்றுத்திறனாளி - உலமா  ஆகியோர் அரசிடமிருந்து பெரும் உதவித்தொகைக்கு தேவைப்படும் வங்கி கணக்கை இலவசமாக ஏற்படுத்தி கொடுக்கிறார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!