தஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை !


மாமன்னர் இராசராசசோழனின் 1032-ம் ஆண்டு சதய திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 30.10.2017 அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  உள்ளுர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலை கட்டிய மாமன்னர் இராசராச சோழனின் சதய திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உள்ளுர் விடுமறை அறிவிக்கப்படுவது போல் இந்த ஆண்டும் மாமன்னர் இராசராச சோழனின் 1032ம் ஆண்டு சதய திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 30.10.2017 அன்று திங்கட்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமறை அறிவித்தும், அதற்கு பதிலாக நவம்பர் மாதம் 25.11.2017 (சனிக்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!