திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ரூ.920 கோடியில் கட்டுப்படும் புதிய முனையத்துக்கான வரைபடத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் கொள்கை ரீதியிலான ஒப்புதலை அளித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபை, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து அதிரைநியூஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னைக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் 13, 59,447 பேர் திருச்சி வழியாக விமானங்களில் பயணித்துள்ளனர்.
நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் கிடைத்துவிட்ட நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம், புதிய முனையத்துக்கான கட்டிட வரைபடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்ட விரிவான அறிக்கையின் முதல் பகுதியை அண்மையில் சமர்ப்பித்தது. இதற்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்தினர் கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையொட்டி, புதிய முனையம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் கி.குணசேகரனிடம் கேட்டபோது; 'திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கான வரை படத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களைப் போல, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை, விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின், ரூ.920 கோடியில் ஒருங்கிணைந்த புதிய முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் 2018 ஆம் ஆண்டில் தொடங்கும்' என்றார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!