அதிரை ஆதம் நகரை சேர்ந்த சேக் என்பவர் நேற்றிரவு இரவு சுமார் 11 மணி அளவில் தனது வீட்டின் வெளியே அவரது இருசக்கர (Side Lock) செய்து வாகனத்தை நிறுத்தி விட்டு அவசர தேவைக்காக தனது காரில் பட்டுகோட்டைக்கு சென்றார்.
சுமார் 12:45 மணியளவில் வீடு திரும்பிய அவர் அவரது வீட்டுக்கருகில் அடையாளம் தெரியாத 3 பேர் நிற்பதை கண்ட அவர் தனது காரில் மெதுவாக நகர்த்தி அந்த நபர்களின் முகத்தினை காண முயற்சித்துள்ளார்.
தனது வாகனத்தில் இருந்து வெளியில் இறங்கிய அவரை கண்டதும் ஓட்டம் பிடித்த திருடர்களை பிடிக்க முற்பட்ட போது தெருக்களுக்குள் புகுந்து திருடர்கள் தப்பித்தனர்.
அவரது வீட்டில் நிறுத்தபட்ட இருசக்கர வாகனம் சிறிது தூரம் திருடர்களால் இழுத்து செல்லபட்டதை அறிந்த அவர் (Side Lock) உடைக்கப்பட்டதை கண்டார். பின்னர் இது தொடர்பாக வாகன உரிமையாளர் அதிரை காவல் நிலையத்தில் வாய்வழி (Oral Complaint) புகார் ஒன்று அளித்துள்ளார்.
திருடர்களிடம் இருந்து நம்முடைய உடமைகளை பாதுகாக்க விழிப்போடு செயல்படுவோம்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!