ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி அதிரையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் நடைபெற்றது.
திட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ, தாசில்தார், அதிரை கிராம நிர்வாக அலுவலர் அசாருத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 300 மாணவிகள் கலந்துகொண்ட இந்த பேரணி அதிரையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வெள்ளம், புயல் காலங்களில் தற்காத்துகொள்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!