ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு!

United Arab Emirates announced a public apology!

அபுதாபி:சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும். இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம். இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி மின்ஹலி தெரிவித்துள்ளார்.

1 comments:

அதிரை.மெய்சா said...

பயனுள்ள தகவல் . தந்தமைக்கு நன்றி UAE -விசா முடிந்தும் தங்கி இருக்கும் நமக்கு தெரிந்தவர்களிடத்திலும் இந்த தகவல் அறியாதவர்களிடத்திலும் அவசியம் இதைப்படிப்போர் செய்தியை எத்திவைக்கவும்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!