மதுரை - துபாய் : நேரடி விமான சேவை!


மதுரை - துபாய் : நேரடி விமான சேவை!

சென்னை : மதுரை மற்றும் துபாய்-க்கு இடையிலான நேரடி விமான சேவையை தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் துவங்க இருக்கிறது.
இதற்கான ஆயத்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 22 ஆம் தியதியில் இருந்து இச்சேவை தொடங்க இருக்கிறது என்று ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.  இவ்விமானச் சேவை தினசரி மதுரையிலிருந்து தினமும் இரவு 11:35 புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2:20 -க்கு துபாயை சென்றடையும். அதே போன்று துபாயிலிருந்து அதிகாலை 3:50-க்கு புறப்பட்டு, 9:45-க்கு மதுரையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு  6,999 ரூபாயும், இரு வழி பயணத்திற்கு 13,909 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கபடும் எனத் தெரிகிறது. பயணச்சீட்டிற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இவ்விமான சேவை வர்த்தகர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comments:

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

தகவலுக்கும் நன்றி.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!