நிதாக்கத்: சவூதி இந்திய துணைத் தூதரகம் அவசர அறிவிப்பு!


ஜித்தா: சவூதி நிதாகத் சட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்டு இந்தியா செல்ல இயலாதவர்களுக்கு, சவூதி ஜித்தா இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"சவூதி நிதாகத் புதிய சட்டத்தின்படி, சட்டவிரோதமாக தங்கியிருந்து நாடு செல்ல அனைத்து ஆவணங்களுக்கான வேலைகளும் முடிந்து, கைரேகை மற்றும் தூதரகத்தால் வழங்கப்பட்ட அவசர கடவுச் சீட்டு அல்லது  தங்களது ஒரிஜினல் கடவுச் சீட்டு(passport) மற்றும் தர்ஹீல் வேலைகள் முடிந்தும், விமான நிலையங்களிலிருந்து பயண எண் (Bayaan Safar) இல்லாமல் திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தியத் தூதரங்களை அணுகுமாறு வேண்டப்படுகிறார்கள்.

ஏற்கனவே இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீண்டும் கொண்டு வந்து, தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகளிடம் சமர்பித்து அவர்கள் மூலம் சரி செய்து, பயண எண்கள் மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது இந்தியத் தூதரகத்தின் அவசர அறிவிப்பாகும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழஙகப்படும். இந்த வாய்ப்பைப் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

மேற்கண்டவாறு சவூதி இந்திய தூதரகத்தின் பத்திரிகை மற்றும் தகவல் பிரிவு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!