மதுரை: மதுவுக்கு எதிராக மாணவி நந்தினியின் உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம் ஆதரவு வலுக்கிறது.
நேற்று 7 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள நந்தினிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோவை மற்றும் திருநெல்வேலி சட்டகல்லுரி மாணவர்கள் சேலம் மாவட்ட மாணவர்கள் இதற்கு ஆதரவாக மக்களிடம் கை எழுது இயக்கம் நடத்தி வருகின்றனர்.அதை முதல்வருக்கும் ,அமைச்சர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க உள்ளனர்.திருநெல்வேலி சட்ட மாணவர்கள் இதற்க்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்தை தமிழ்நாட்டில் வாழும் அவர்கள் உறவினர்கள் அனைவர்களுக்கும் கொண்டு சேர்த்து வருகின்றனர். தொலைபெசிமூலம் மனபூர்வமாக வாழ்த்தி வருகின்றனர் என்று நந்தினி தெரிவித்துள்ளார்.
இதுவல்லாது, ஃபேஸ்புக்,மற்றும் குறுந்தகவல்கள் மூலமும் நந்தினியின் இந்த போராட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் நந்தினியின் உண்ணாவிரதப் போராட்டத்தினால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருதுவர்கள்ளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் எப்படியாவது எங்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன .
ஆனாலும் நாங்கள் போரட்டத்தை தொடர்கிறோம். இனியும் அரசாங்கம் இதற்க்கு முடிவு கட்டவில்லையனில் தமிழ்நாடில் மதுவுக்கு எதிரான போராட்டம் பொதுமக்கள் அளவில் மேலும் வலுப்பெறும் என்று நந்தினி தெரிவித்துள்ளா..
இந்த நிலையில் நந்தினியின் இப்போராட்டத்தை ஊடகங்கள் திட்டமிட்டு வெளிக் கொண்டு வருவதை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
நன்றி- இந்நேரம் .காம்
1 comments:
பதிவுக்கு நன்றி
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!