திருவாரூர் - பட்டுக்கோட்டை - 2-வது கட்ட ரயில் சோதனை ஓட்டம்


திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 2-வது கட்டமாக ரயில் சோதனை ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் எதிர்வரும் மார்ச் 31 க்குள் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் முதல் கட்டமாக, கடந்த மார்ச் 09ந் தேதி தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஏ.கே.மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் ரெயில் என்ஜின் மூலம் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் 2-வது கட்டமாக பெட்டிகள் இணைப்புடன் கூடிய இரயில் என்ஜின் மூலம், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார் ரெட்டி, சென்னை மண்டல கட்டுமானப்பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சன் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய ரயில்வே உயர் அதிகாரிகள் திருவாரூர், திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வரையிலான பாதையில் உள்ள தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள், பாலங்கள், ரயில் கேட்டுகள், கேட் கீப்பர் அறைகள் ஆகியவற்றை, இன்று வெள்ளிக்கிழமை காலை ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். ஆய்வின் போது தண்டவாளத்தில் அதிர்வுகள் ஏற்படுகிறதா? கோளாறுகள் ஏதாவது உள்ளதா? என அதிகாரிகள் கவனித்தனர்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், ரயில்வே உயர் அதிகாரிகளை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ. விவேகானந்தம், துணைத் தலைவர் கா. லெட்சுமிகாந்தன், துணைச் செயலாளர் ஜெ.பிரின்ஸ் விஜயகுமார், உறுப்பினர்கள் அசோக்குமார், திரேஷ்குமார், இராசேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு மீண்டும் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!